< Back
மாநில செய்திகள்
சட்டக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது
மாநில செய்திகள்

சட்டக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது

தினத்தந்தி
|
13 July 2022 1:57 AM IST

தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக்கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. சென்னை தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் அமைச்சர் ரகுபதி நேற்று இதனை தொடங்கி வைத்தார்.

இதன்படி பி.ஏ., எல்.எல்.பி., பி.காம், எல்.எல்.பி., பி.பி.ஏ., எல்.எல்.பி., பி.சி.ஏ., எல்.எல்.பி. போன்ற 5 வருட சட்ட படிப்புகளில் 2,355 இடங்கள் உள்ளன. இவற்றிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது.

மேலும் செய்திகள்