விழுப்புரம்
இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை
|இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையை டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்,
கண்டமங்கலம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சிறுவந்தாட்டில் இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழுதலைவர் வாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் ஆர். லட்சுமணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். பின்னர் வீடு, வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் அசோக்குமார், சரவணன், முருகன், ராஜேந்திரன், சுந்தரமூர்த்தி, ராஜசேகர், முரளி, இளைஞரணி அமைப்பாளர் ஏழுமலை, துணை அமைப்பாளர்கள் கலாநிதி, கேசவன், குமார், ராஜ்குமார், ரஞ்சித்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளந்திரையன் மற்றும் நிர்வாகிகள் ரமேஷ், அரசன், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், நிர்வாகிகள் பக்தவச்சலம், கிருஷ்ணராஜ், ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.