< Back
மாநில செய்திகள்
மருத்துவ படிப்புகளுக்கு மாணவிகள் சேர்க்கை
தேனி
மாநில செய்திகள்

மருத்துவ படிப்புகளுக்கு மாணவிகள் சேர்க்கை

தினத்தந்தி
|
23 Jun 2022 11:16 PM IST

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையின் அலைடு ஹெல்த் சயின்ஸ் நிறுவனத்தில் டிப்ளமோ மருத்துவ படிப்புகளுக்கான மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது.

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையின் அங்கமான அலைடு ஹெல்த் சயின்ஸ் நிறுவனத்தில் டிப்ளமோ மருத்துவ படிப்புகளுக்கான மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது. மெடிக்கல் லேப் டெக்னாலஜி, ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, விபத்து மற்றும் அவசர சிகிச்சை மேலாண்மை உள்பட 5 பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்க 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்-2 தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இங்கு சிறந்த கல்வி மற்றும் பயிற்சி வசதி, கல்விக் கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் வசதி, தங்கும் விடுதி, இலவச ஆங்கில பயிற்சி வகுப்புகள், பாதுகாப்பான இலவச பஸ் வசதி ஆகிய வசதிகளுடன், படித்து முடித்தவுடன் 100 சதவீதம் தனியார் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு ஆகிய முக்கிய அம்சங்கள் உள்ளது. தற்போது மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்