< Back
மாநில செய்திகள்
பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை

தினத்தந்தி
|
17 Jun 2023 11:45 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 30-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சங்கராபுரம் மாணவர் விடுதி, புதுப்பட்டு மாணவர் விடுதி மற்றும் சங்கராபுரம் தொழிற்பயிற்சி மாணவர் விடுதிகளில் (2023-2024)-ம் கல்வி ஆண்டிற்கான விடுதி சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் இவ்விடுதிகளில் மாணவர்கள் தங்கி படிப்பதற்கு http://tnadw.hms.in என்ற விடுதி மேலாண்மை இணையதளம் மூலமாகவோ அல்லது விடு்தி காப்பாளர் மூலம் நேரடியாகவோ வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்