< Back
மாநில செய்திகள்
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை

தினத்தந்தி
|
17 Sept 2023 12:45 AM IST

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான மாணவர்‌ சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 22-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

லால்குடி ௯ட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி நிலையம், பெரம்பலூர் நேஷனல் ஐ.டி.ஐ. துறைமங்கலம் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் 2023-24-ம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான மாணவர்கள் சேர்க்கை கடந்த 13-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை www.tncuicm.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 22-ந் தேதியாகும். மாணவர்கள் சேர்க்கைக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1-8-2023 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. ஓராண்டு பயிற்சி காலத்தில் 2 பருவ முறைகளை கொண்ட பட்டய படிப்பாகும். பயிற்சி கட்டணம் ரூ.18,850 செலுத்த பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை பார்வையிடவும். (பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப நகலை தேர்வு செய்யப்பட்ட பயிற்சி நிலையத்திற்கு நேரிலோ, அல்லது பதிவு தபால், ௯ரியர் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும்). மேற்கண்ட தகவலை பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்