< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு - மாநில கல்லூரியில் பி.காம்., இடங்களுக்கு கடும் போட்டி
|1 Jun 2023 10:39 PM IST
மொத்தம் 150 இடங்களுக்கு 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.
சென்னை,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை மாநில கல்லூரியில் பி.காம். ஜெனரல், பி.காம். கார்ப்பரேட் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது.
மொத்தம் 150 இடங்களுக்கு 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். கடலூர், தேனி, திருவள்ளூர் ஆகிய இடங்களில் இருந்து வந்த கிராம பின்னனி கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.