திண்டுக்கல்
நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்
|மின் உயர்வை கண்டித்து அ.தி.மு.க. போராட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் திண்டு்க்கல் சீனிவாசன் கூறினார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றி பேசுகையில், தி.மு.க. அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதும் நடைபெறும் முதல் போராட்டம் இதுவாகும். எனவே இந்த போராட்டத்தை மாபெறும் வெற்றி பெற தொண்டர்கள் பாடுபட வேண்டும். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள், நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில், அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதிமுருகன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வி.டி.ராஜன், அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, மோகன், சேசு, முரளிதரன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.