< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரிய மனு - மதுரை ஐகோர்ட்டு கிளை ஒத்திவைப்பு
|7 Feb 2024 9:26 PM IST
விரிவான விசாரணைக்காக வழக்கை ஒத்திவைப்பதாக மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
சென்னை,
மதுரையைச் சேர்ந்த பிரபாகர் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கீழடியில் நடைபெற்ற 4 முதல் 9-ம் கட்ட அகழாய்வு அறிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டதாகவும், மத்திய அரசு நடத்திய முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கைகள் வெளியிடப்படவில்லை எனவும், அந்த அறிக்கைகளை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், விரிவான விசாரணைக்காக இந்த வழக்கை ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.