< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சேலத்தில் நடைபெற இருந்த தி.மு.க. இளைஞரணி மாநாடு ஒத்திவைப்பு
|8 Dec 2023 11:35 AM IST
மழை காரணமாக இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்,
சேலத்தில் வரும் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி 17-ந்தேதி நடைபெற இருந்த தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு, வரும் 24-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.