< Back
மாநில செய்திகள்
கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கு தள்ளிவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கு தள்ளிவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
18 Oct 2022 12:22 AM IST

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கினை தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை.

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றி மத்திய அரசு கொண்டு வந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அரசியலமைப்பு சட்ட பிரச்சினை தொடர்பான இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எம்.சுந்தர், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட முழு அமர்வு அமைக்கப்பட்டது. இந்த முழு அமர்வு முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு தரப்பில், இந்த வழக்கின் இறுதி விசாரணைக்கு முன்பு வழக்கு ஆவணங்களை பகிர்ந்துகொள்ள வேண்டியுள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 7-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்