< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அதிமுக ஆலோசனை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
|12 July 2024 6:33 PM IST
அதிமுக ஆலோசனை கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெற இருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அதிமுக பொதுசு்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, வரும் 17ம் தேதி தேனி, திண்டுக்கல், தென்காசி பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில், மொஹரம் பண்டிகை மற்றும் ஆடி 1 காரணத்தினால் வரும் 17ம் தேதி நடக்க இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, வரும் 17ம் தேதியன்று தென்காசி மாவட்டத்தில் சசிகலா சுற்றுப்பயணம் தொடங்க உள்ளார். இந்நிலையில், தென்காசி தொகுதி அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெற இருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.