< Back
மாநில செய்திகள்
சூரிய காந்த புயலின் தரவுகளை சேகரித்த ஆதித்யா எல்-1 விண்கலம் - விஞ்ஞானிகள் தகவல்
மாநில செய்திகள்

சூரிய காந்த புயலின் தரவுகளை சேகரித்த ஆதித்யா எல்-1 விண்கலம் - விஞ்ஞானிகள் தகவல்

தினத்தந்தி
|
14 May 2024 10:25 PM IST

சமீபத்தில் ஏற்பட்ட சூரிய காந்த புயலின் தரவுகளை ஆதித்யா எல்-1 விண்கலம் சேகரித்துள்ளது.

சென்னை,

சூரியனின் வெளிப்புறத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ கடந்த ஆண்டு ஆதித்யா எல்-1என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் லாக் ரேன்ஜின் முதல் பள்ளியில் இருந்து தன்னுடைய பணியை செய்து வருகிறது.

இந்த நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த 10, 12-ம் தேதியில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை புகைப்படமாக எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது என்றும் 2003-ம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த சூரியகாந்த புயல் இதுவாகும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.



மேலும் செய்திகள்