< Back
மாநில செய்திகள்
திருக்கோவில்களுக்கான ஆடி மாத சுற்றுலா திட்டம் - அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்
மாநில செய்திகள்

திருக்கோவில்களுக்கான ஆடி மாத சுற்றுலா திட்டம் - அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
18 July 2023 6:59 PM IST

ஆடி மாத அம்மன் கோவில் ஆன்மிக சுற்றுலாவை அமைச்சர் சேகர் பாபு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை,

சென்னை, பாரிமுனை உள்ள காளிகாம்பாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆடி மாத அம்மன் கோவில் ஆன்மிக சுற்றுலாவை அமைச்சர் சேகர் பாபு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"இன்றைக்கு காளிகாம்பாள் கோவிலில் இருந்து 10 அம்மன் கோவில்களுக்கு புறப்பட்ட ஆன்மிக சுற்றுலாவில் 47 பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்யப்பட்டு, கோவில் பிரசாதங்கள் மற்றும் மதிய உணவும் வழங்கப்படுகிறது. சென்னையில் 2 பயணத்திட்டங்களாக ரூ.1,000 மற்றும் ரூ.800 ஆகிய கட்டணங்களில் இச்சுற்றுலா செயல்படுத்தப்படுகிறது" என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.



மேலும் செய்திகள்