< Back
மாநில செய்திகள்
ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க புதிய இணையதளம்
சேலம்
மாநில செய்திகள்

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க புதிய இணையதளம்

தினத்தந்தி
|
9 Feb 2023 1:00 AM IST

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொதைக்கு விண்ணப்பிக்க புதிய இணைதளம் திறக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் இந்த ஆண்டு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்தல் குறித்து கல்லூரி முதல்வர்கள், பொறுப்பு அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய, பழங்குடியினர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இணையவழியில் விண்ணப்பிக்க புதிய இணையதளம் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரடியாக தங்களின் கல்வி உதவித்தொகையினை விண்ணப்பிக்கும் வகையில் http://tnadtwscholarship.tn.gov.inஎன்ற இணைய தளம் அமைக்கப்பட்டு உள்ளன.

உதவித்தொகை

கடந்த ஆண்டு மாவட்டத்தில் 158 கல்லூரிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த 24 ஆயிரத்து 358 மாணவ, மாணவிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். அனைத்து வகை கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர், கிறிஸ்தவ, மதம் மாறிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை இணையவழியில் விண்ணப்பிக்கப்பட்டதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள உறுதி செய்ய வேண்டும்.

அதே போன்று மாணவர்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மணி, முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்