< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - சரத்குமார்
|8 Dec 2023 4:54 AM IST
தொலைநோக்கு சிந்தனையுடன் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
புயல் மழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களை பெரும் இன்னலுக்கு தள்ளிய இந்த இயற்கை பேரிடரால் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்போதும் இயல்புநிலைக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். அத்தியாவசிய தேவைகளுக்கும், வாழ்வாதாரத்திற்கும் போராடி வருகிறார்கள்.
இதை கருத்தில் கொண்டு வருங்காலத்தில் தொலைநோக்கு சிந்தனையுடன் தமிழக அரசு செயல்பட வேண்டும். மாநில பேரிடர் மேலாண்மை சிறப்பு படையை அமைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.