< Back
மாநில செய்திகள்
கிராம ஊராட்சிக்கு போதிய நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்
திருவாரூர்
மாநில செய்திகள்

கிராம ஊராட்சிக்கு போதிய நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்

தினத்தந்தி
|
13 May 2023 12:15 AM IST

கிராம ஊராட்சிக்கு போதிய நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்

தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலாளர் சங்கம் சாா்பில் மாநில பொதுச்செயலாளர் தர்மராஜா தலைமையில் மாநில துணைத்தலைவர் சங்கர், மாவட்ட பொருளாளர் சூரியமூர்த்தி, மாவட்ட செயலாளர் கருப்பையன் ஆகியோர் கலெக்டர் சாருஸ்ரீக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 2 மாதங்கள் முதல் 5 மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. ஊதியம் இல்லாமல் பணி செய்து வருவதால் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. எனவே கிராம ஊராட்சிக்கு போதிய நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்