< Back
மாநில செய்திகள்
முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு:லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பு
தேனி
மாநில செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு:லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பு

தினத்தந்தி
|
4 Oct 2023 12:15 AM IST

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரித்தது.

கூடலூர் அருகே லோயர்கேம்பில் நீர்மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு 4 ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் இங்கு மின் உற்பத்தி நடைபெறுகிறது. கடந்த சில நாட்களாக 2 ஜெனரேட்டர் மூலம் 36 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது.

நேற்று முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.60 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 2,357 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 1,222 கன அடியாகவும் அதிகரித்தது. இதனால் லோயர்கேம்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர் மூலம் 119 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. முதல், 2-வது ஜெனரேட்டரில் தலா 42 மெகாவாட் மின்சாரம், 3-வது ஜெனரேட்டரில் 35 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்