< Back
மாநில செய்திகள்
முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு:லோயர்கேம்பில் மின் உற்பத்தி அதிகரிப்பு
தேனி
மாநில செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு:லோயர்கேம்பில் மின் உற்பத்தி அதிகரிப்பு

தினத்தந்தி
|
11 Sept 2023 12:15 AM IST

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

கூடலூர் அருகே லோயர்கேம்பில் நீர் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் இங்கு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக 4 ஜெனரேட்டர்கள் உள்ளன. ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும். நேற்று முன்தினம் வரை அணையில் இருந்து வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஒரு ஜெனரேட்டர் மூலம் 36 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் கூடுதலாக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் 2 ஜெனரேட்டரில் தலா 23 மெகாவாட் வீதம் மொத்தம் 46 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே நேற்று முல்லைப்பெரியறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 526 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 500 கன அடியாகவும் உள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்