< Back
மாநில செய்திகள்
சென்னை- நெல்லை இடையே கூடுதல் வந்தே பாரத் ரெயில் சேவை
மாநில செய்திகள்

சென்னை- நெல்லை இடையே கூடுதல் வந்தே பாரத் ரெயில் சேவை

தினத்தந்தி
|
14 Nov 2023 12:15 AM IST

சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரெயிலானது, பிற்பகல் 2.15 மணிக்கு நெல்லையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை- நெல்லை இடையே தற்போது இயக்கப்பட்டுவரும் வந்தேபாரத் ரெயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், சென்னை - நெல்லை இடையே கூடுதல் வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, புதிதாக இயக்கப்படவுள்ள கூடுதல் வந்தேபாரத் ரெயில் சேவை, வருகிற 16-ந்தேதி முதல் டிசம்பர் 28-ந்தேதி வரை வாரந்தோறும் வியாழக்கிழமை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரெயிலானது, பிற்பகல் 2.15 மணிக்கு நெல்லையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்