< Back
மாநில செய்திகள்
வருகிற 1-ந்தேதி முதல் நெல்லை-செங்கோட்டை, திருச்செந்தூருக்கு கூடுதல் ரெயில்கள் இயக்கம்
மாநில செய்திகள்

வருகிற 1-ந்தேதி முதல் நெல்லை-செங்கோட்டை, திருச்செந்தூருக்கு கூடுதல் ரெயில்கள் இயக்கம்

தினத்தந்தி
|
25 Jun 2022 3:38 PM IST

நெல்லை - செங்கோட்டை மற்றும் நெல்லை- திருச்செந்தூர், மதுரை - செங்கோட்டை இடையே வருகிற 1-ந் தேதி முதல் கூடுதல் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

நெல்லை - செங்கோட்டை மற்றும் நெல்லை- திருச்செந்தூர், மதுரை - செங்கோட்டை இடையே வருகிற 1-ந் தேதி முதல் கூடுதல் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

நெல்லை பகுதிக்கு 2 ஜோடி சிறப்பு விரைவு ரெயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. அதன்படி நெல்லை- செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு காலை 11.25 மணிக்கு செங்கோட்டை செல்லும். இதே மார்க்கத்தில் மற்றொரு நெல்லை-செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு செங்கோட்டை செல்லும்.

மறுமார்க்கத்தில் செங்கோட்டை - நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் செங்கோட்டையில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு மாலை 5.20 மணிக்கு நெல்லை செல்லும். இதே மார்க்கத்தில் மற்றொரு செங்கோட்டை - நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் செங்கோட்டையில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.25 மணிக்கு நெல்லை செல்லும். இந்த ரெயில்கள் நெல்லை டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருச்செந்தூர் - நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் திருச்செந்தூரில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு நெல்லை செல்லும். மறுமார்க்கத்தில் நெல்லை- திருச்செந்தூர் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருச்செந்தூர் செல்லும். இந்த ரெயில்கள் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சினாவிளை, நாசரேத், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும் செய்திகள்