< Back
மாநில செய்திகள்
தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மாநில செய்திகள்

தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தினத்தந்தி
|
10 March 2024 1:27 AM IST

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20683), செங்கோட்டையிலிருந்து தாம்பரம் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20684) இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16101), கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16102) இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தென்மலை ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்