< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை எழும்பூர்-கொல்லம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்
|19 March 2024 8:49 PM IST
சென்னை எழும்பூர்-கொல்லம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்களை வழங்கி ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண் 16101), கொல்லத்தில் இருந்து எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16102) உளுந்தூர்பேட்டை ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.
அதே போல, சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20605), திருச்செந்தூரில் இருந்து எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20606) குத்தாலம் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.
மேலும் மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரெயில், விழுப்புரம் - திண்டுக்கல் விரைவு ரெயில்கள் இரு மார்க்கமாகவும் வடமதுரை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.