< Back
மாநில செய்திகள்
100 நாள் வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் - விஜய்வசந்த் எம்.பி.
மாநில செய்திகள்

100 நாள் வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் - விஜய்வசந்த் எம்.பி.

தினத்தந்தி
|
6 Dec 2023 3:15 AM IST

குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து பேசி வருகின்றன.

சென்னை,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய்வசந்த் எம்.பி. பேசியதாவது,

100 நாள் வேலை திட்டம் மூலம் இந்தியாவில் உள்ள கிராமப்புற பெண்கள் அதிக பயன்பெற்று வருகின்றனர். 2005-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. கிராமப்புற பொருளாதாரம் உயர்ந்தது.

இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 16 கோடி தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்றால் ரூ.2 லட்சம் கோடிக்கு அதிகமாக நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு 60 ஆயிரம் கோடி தான் நிதி ஒதுக்கி உள்ளது. இது, கடந்த ஆண்டை விட 21 சதவீதம் குறைவு ஆகும்.

நிதி குறைப்பால் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் இந்த திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு புதிய ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்