சென்னை சென்டிரல்-அகமதாபாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
|சென்னை சென்டிரல்-அகமதாபாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து வருகிற 4-ந் தேதியில் முதல் 25-ந் தேதி வரை (சனிக்கிழமை மட்டும்) காலை 9.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (வண்டி எண்-20954), மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 10-ந் தேதியில் முதல் 31-ந் தேதி வரை (வெள்ளிக்கிழமை மட்டும்) மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு அகமதபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (20953) கூடுதலாக படுக்கை வசதியுடன் கூடிய ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.
குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இருந்து வருகிற 8-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை (புதன்கிழமை மட்டும்) காலை 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (20920), மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 12-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை (ஞாயிற்றுகிழமை மட்டும்) இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு ஏக்தா நகர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (20919) கூடுதலாக படுக்கை வசதியுடன் கூடிய ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.