< Back
மாநில செய்திகள்
மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
மதுரை
மாநில செய்திகள்

மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

தினத்தந்தி
|
17 July 2022 2:35 AM IST

மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.

மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.

வாகன நிறுத்துமிடம்

மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அவர்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை வடகரை பகுதியில் ரூ.291.37 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை கால்வாய் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பார்வையிட்டனர்.

அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.1295.76 கோடி மதிப்பீட்டில் முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரை மாநகராட்சியில் 100 வார்டு பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்குவதற்கு குழாய்கள் மற்றும் மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் கே.கே.நகர் பகுதியில் 12 லட்சம் லிட்டர் கொள்ளளவில் கட்டப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அவர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் பஸ் நிலையத்தின் மேம்பாட்டு பணிகள் மற்றும் அதன் அருகில் ரூ.112.06 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பேரங்காடி கட்டுமான பணியினையும், மீனாட்சியம்மன் கோவில் அருகில் ரூ.40.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் பணியினையும் அவர்கள் பார்வையிட்டனர். அவர்கள் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

ஆய்வுக்கூட்டம்

அதனைத்தொடர்ந்து அண்ணா மாளிகையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அதில் மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள், குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் குறித்தும், மாநகராட்சியின் 100 வார்டு பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்குதல், சாலைகள் அமைத்தல், புதிய தெருவிளக்குகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல், மாநகராட்சி பகுதிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளுதல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் திடக்கழிவுகளை முறையாக அகற்றுதல், வரி வசூல் பணிகள், வரைபட மற்றும் கட்டிட அனுமதி, மக்கள் குறைதீர்க்கும் பிரிவு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தனர்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், துணை ஆணையாளர் முஜிபூர் ரகுமான், நகரப்பொறியாளர் லட்சுமணன், கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேசுவரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்