< Back
மாநில செய்திகள்
முக்கொம்பு மேலணையில் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
திருச்சி
மாநில செய்திகள்

முக்கொம்பு மேலணையில் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

தினத்தந்தி
|
5 Aug 2022 1:58 AM IST

முக்கொம்பு மேலணையில் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.

ஜீயபுரம்:

திருச்சி முக்கொம்பு மேலணையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து மற்றும் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் நீர் வெளியேற்றம் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் நீர்வளத்துறை யின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மேட்டூரில் இருந்து 2.15 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நீரானது முக்கொம்பு மேலணையை வந்தடைய 8 முதல் 9 மணி நேரம் ஆகும். அதாவது இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு வந்துவிடும். தொடர்ந்து 24 மணி நேரமும் காவிரி கரையோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை மாவட்ட கலெக்டர் கண்காணித்து வருகிறார். திருச்சியில் 2 தாழ்வான பகுதிகள் தண்ணீர் தேங்கும் இடமாக பார்க்கப்படுகிறது. பாதிப்பு உள்ள சில இடங்களில் உள்ள பொதுமக்களை வேறு இடங்களுக்கு மாற்றி உள்ளோம். வேறு ஏதும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இல்லை, என்று கூறினார்.

அப்போது மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் நீர்வளத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்