< Back
மாநில செய்திகள்
கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் ஆய்வு

தினத்தந்தி
|
17 Feb 2023 1:00 AM IST

எண்ணேகொல்புதூர் கால்வாய் திட்ட பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் ஆய்வு செய்தார்.

எண்ணேகொல்புதூர் திட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எண்ணேகொல் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு வழியாக, தென்பெண்ணை ஆற்றில் இருந்து வெள்ளக்காலங்களில் வரும் உபரிநீரை, வலது மற்றும் இடதுபுறம் கால்வாய் அமைத்து, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வறட்சியான பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் எண்ணேகொல்புதூர் கால்வாய்திட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி ரூ.233 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் புதிய வலதுபுற பிரதான கால்வாய் 50.65 கி.மீ தூரத்திற்கும், புதிய இடதுபுற பிரதான கால்வாய் 23 கி.மீ தூரத்திற்கும் அமைய உள்ளது.

கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

இந்த திட்டத்தில் கிருஷ்ணகிரி அணைக்கு அருகே கத்தேரி ஊராட்சியில் வலதுபுறக்கால்வாய் அமைக்கும் பணியை நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்சக்சேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, எண்ணேகோல்புதூர் கால்வாய் அமைக்கும் திட்டத்தின் கீழ் வலது மற்றும் இடதுபுறங்களில் கால்வாய்கள் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். இக்கால்வாய் பணிகள் துரிதப்படுத்தி, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இப்பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, சென்னை மண்டல தலைமை பொறியாளர் முரளிதரன், பெண்ணையாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் மணிமோகன், மேல்பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்