அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு
|அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படுவது குறித்து கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
சென்னை,
சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் அமைச்சர் பதவியை இழந்தார். அவர் வகித்து வந்த துறைகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
அதாவது, முன்னாள் அமைச்சர் பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித் துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப துறைகளை இனி அமைச்சர் ராஜகண்ணப்பன் கவனிப்பார் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படுவது குறித்து கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் துறைகளை வழங்குவதற்கு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர் கல்வி, அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜகண்ணப்பனிடம் இருந்த கதர், கிராமத்தொழில் துறை அமைச்சர் ஆர். காந்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.