< Back
மாநில செய்திகள்
ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.50 லட்சத்தில் கூடுதல் கட்டிடம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.50 லட்சத்தில் கூடுதல் கட்டிடம்

தினத்தந்தி
|
4 Sept 2023 12:15 AM IST

தியாகதுருகம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.50 லட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தியாகதுருகம்

தியாகதுருகம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சங்கர், செயல் அலுவலர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் கொளஞ்சியப்பன் வரவேற்றார். கூட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சம் மதிப்பில் கழிவு நீர் வாகனம் வாங்குதல், தியாகதுருகம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுதல், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூய்மை பணிக்காக 2 பேட்டரி வாகனம் வாங்குதல் மற்றும் ஆழ்துளை கிணறு அமைத்தல், சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்