< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
சென்னை ரெயில்வே கோட்டத்தில் கூடுதலாக 96 தானியங்கி 'டிக்கெட்' எந்திரங்கள்
|21 March 2023 10:12 AM IST
சென்னை ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட 74 நிலையங்களில் கூடுதலாக 96 தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது.
சென்னையில் மின்சார ரெயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு எழும்பூர், சென்டிரல், அம்பத்தூர், ஆவடி, பேசின்பாலம், பெரம்பூர், திருவள்ளூர், வில்லிவாக்கம், கிண்டி, கோடம்பாக்கம், பூங்கா நிலையம், கடற்கரை, சென்னை கோட்டை, நுங்கம்பாக்கம், பல்லாவரம், பரங்கிமலை, செங்கல்பட்டு, தாம்பரம், சூலூர்பேட்டை ஆகிய 19 நிலையங்களில் 34 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
எனினும் அலுவலக நேரங்களில் 'டிக்கெட்' கவுண்ட்டர்களில் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னை ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட 74 நிலையங்களில் கூடுதலாக 96 தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது.