< Back
மாநில செய்திகள்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட முயன்ற நடிகை...!
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட முயன்ற நடிகை...!

தினத்தந்தி
|
14 Oct 2022 11:55 AM IST

ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை நடிகை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்,

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை சாந்தினி புகார் அளித்திருந்தார்.

புகாரை விசாரித்த அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் 8 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து பெங்களூருவில் வைத்து 2021 ஜூன் 20ம் தேதி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வீட்டை நடிகை சாந்தினி முற்றுகையிட முயன்றார். தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்து காரில் அனுப்பி வைத்தர். அப்போது அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஏமாற்றியதாகவும், தன்னை பார்த்து கொள்வேன் என்று கூறியதாலேயே வழக்கை வாபஸ் பெற்றதாகவும் நடிகை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்