< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விஜயகாந்த் உருவப்படத்திற்கு நடிகை ரோஜா மலர்தூவி மரியாதை
|7 Jan 2024 7:38 PM IST
விஜயகாந்த் நினைவிடத்தில் தினமும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை,
தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்கள் தினமும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை, சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்ற ஆந்திர மந்திரியும், நடிகையுமான ரோஜா மற்றும் அவரது கணவர் ஆர்.கே.செல்வமணி விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன்பிறகு பிரேமலதா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.