< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நடிகை குஷ்புவிற்கு அறுவை சிகிச்சை.. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு
|24 Jun 2023 2:47 PM IST
நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவிற்கு முதுகு தண்டுவட பகுதியில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை,
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு , சென்னை கிரீம்ஸ்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், இடுப்பு எலும்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் முழுமையாக குணமாகும் என்று நம்புகிறேன் எனவும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகை குஷ்புவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, நலமுடன் இருப்பதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. விரைவில் குஷ்பு வீடு திரும்ப உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.