< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
எடப்பாடி பழனிசாமியுடன் நடிகை கஸ்தூரி திடீர் சந்திப்பு
|28 Feb 2024 9:00 AM IST
எடப்பாடி பழனிசாமியை பா.ஜனதா ஆதரவு நடிகையான கஸ்தூரி திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் த.மா.கா. மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசினார். தொடர்ந்து நேற்று மாலை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை, நடிகை கஸ்தூரி நேரில் சந்தித்து பேசினார். சிறிது நேரம் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் நடிகை கஸ்தூரி, எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த சந்திப்பின்போது இருவரும் தற்போதைய அரசியல் குறித்து பேசினார்களா? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமியை பா.ஜனதா ஆதரவு நடிகையான கஸ்தூரி திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.