< Back
மாநில செய்திகள்
குலசை தசரா திருவிழா நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் பங்கேற்கலாம் - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
மாநில செய்திகள்

குலசை தசரா திருவிழா நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் பங்கேற்கலாம் - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு

தினத்தந்தி
|
26 Sept 2022 2:52 PM IST

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா நிகழ்ச்சிகளில் சினிமா, டிவி மற்றும் நாடக நடிகர்கள் பங்கேற்க அனுமதி வழங்கி ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் துணை நடிகைகள், நடன அழகிகள் உள்ளிட்டோர் ஆபாசமாக நடனமாடுவதற்கும், ஆபாசமான பாடல்களை ஒலிப்பதற்கும் இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தப்படியாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த விழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த தசரா குழுவின் செயலர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா நிகழ்ச்சிகளில் சினிமா, டிவி மற்றும் நாடக நடிகர்கள் பங்கேற்க அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோன்று, தசரா விழா நிகழ்ச்சியில் ஆபாச நடனம் இடம்பெறுவதை அனுமதிக்ககூடாது என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்