< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

தந்தையை இழந்து வாடும் நடிகர் அஜித்துக்கு நடிகர் விஜய் நேரில் ஆறுதல்...!

தினத்தந்தி
|
24 March 2023 1:53 PM IST

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் இன்று காலை காலமானார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் ( வயது 85) நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் இன்று காலை காலமானார்.

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து, எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம்.

இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்ய ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம் என அஜித் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. இதையடுத்து நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் உடல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தந்தையை இழந்த நடிகர் அஜித்தின் வீட்டிற்கு நடிகர் விஜய் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டிற்கு சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்