< Back
மாநில செய்திகள்
மதுரையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் வடிவேலு
மாநில செய்திகள்

மதுரையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் வடிவேலு

தினத்தந்தி
|
19 March 2023 7:01 PM IST

மதுரையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை நகைச்சுவை நடிகர் வடிவேலு பார்வைட்டார்.

மதுரை,

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வருட வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் புகைப்பட கண்காட்சியானது மதுரை மேனேந்தல் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த புகைப்பட கண்காட்சியில் முதல் அமைச்சரின் ஒரு வயது முதல் தற்போதுவரையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இடம்பெறுள்ளன. மேலும், இதில் முன்னாள், இன்னாள் அரசியல் தலைவர்கள், மற்றும் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த புகைப்பட கண்காட்சியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். புகைப்பட கண்காட்சியை நகைச்சுவை நடிகை வடிவேலுவும் நேரில் வந்து பார்வையிட்டார். அமைச்சர் மூர்த்தியும் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்