< Back
மாநில செய்திகள்
சிறுமலையில் கிராம மக்களுடன் சேர்ந்து நடனமாடிய நடிகர் சூரி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

சிறுமலையில் கிராம மக்களுடன் சேர்ந்து நடனமாடிய நடிகர் சூரி

தினத்தந்தி
|
4 Jun 2022 10:12 PM IST

சிறுமலையில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்துகொண்ட நடிகர் சூரி கிராம மக்களுடன் சேர்ந்து நடனமாடினார்.

திண்டுக்கல் அருகே 'சின்ன கொடைக்கானல்' என்று அழைக்கப்படும் சிறுமலை உள்ளது. இங்கு பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூரி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனால் படப்பிடிப்புக்காக அவர் சிறுமலையில் தங்கியிருந்தார்.

இந்தநிலையில் சிறுமலைபுதூரில் உள்ள செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. இதையொட்டி அம்மன் மஞ்சள் நீராடும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து வாணவேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் மற்றும் பூஞ்சோலை சென்றடையும் நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கிடையே படப்பிடிப்பு முடிந்து அந்த வழியாக வந்த நடிகர் சூரி, அங்கு நடைபெற்ற திருவிழாவில் போலீஸ் சீருடையுடன் கலந்துகொண்டார். அப்போது அவர் கிராம மக்களுடன் சேர்ந்து நடனமாடி உற்சாகப்படுத்தினார். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவருடன் சேர்ந்து பலரும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டனர்.

இதற்கிடையே நடிகர் சூரி கோவில் திருவிழாவில் கலந்துகொண்டு நடனமாடிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி உள்ளது.


Related Tags :
மேலும் செய்திகள்