நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு நடிகர் சரத்குமார் இரங்கல்
|நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதற்கு அனுதாபம் தெரிவித்து நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ரா.சரத்குமார் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
தென்னிந்திய திரைப்பட நடிகையும், எனது நெருங்கிய குடும்ப நண்பருமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்த தகவல் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.
வித்யாசாகர் மறைவால் மிகுந்த வேதனையில் ஆழ்ந்திருக்கும் மீனாவும், நைனிகாவும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் இத்துயரில் இருந்து விரைவில் மீள்வதற்கு இறைவன் அருள்புரியட்டும். அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் சரத்குமார் கூறியிருக்கிறார்.