< Back
மாநில செய்திகள்
அவன் இவன் பட நடிகர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்
மாநில செய்திகள்

'அவன் இவன்' பட நடிகர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

தினத்தந்தி
|
12 July 2022 2:59 PM IST

அவன் இவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான குணசித்திர நடிகர் ராமராஜன் மரணம் அடைந்தார்.

சென்னை:

பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடித்த 'அவன் இவன்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராமராஜன். இந்த படத்தில் யாரும் திருடக்கூடாது என்று கிடா வெட்டி விருந்து வைத்து சத்தியம் வாங்கும் யதார்த்தமான போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து தகடு, சவரிக்காடு உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தார்.

இவர் வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வுக்கு பின் சினிமாவில் நடிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராமராஜனுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி ராமராஜன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72. சொந்த ஊரான முதுகுளத்தூரில் ராமராஜன் உடலுக்கு இறுதி சடங்குகள் நடந்தன. மறைந்த ராமராஜனுக்கு மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்