< Back
மாநில செய்திகள்
ரசிகர்களை பார்த்து கையசைத்து நடிகர் ரஜினிகாந்த் உற்சாகம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

ரசிகர்களை பார்த்து கையசைத்து நடிகர் ரஜினிகாந்த் உற்சாகம்

தினத்தந்தி
|
13 Oct 2023 3:04 AM IST

பணகுடி படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார்.

பணகுடி:

'ஜெயிலர்' திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்துக்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என்று பெயரிடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள தனியார் தள ஓடு தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் வித்தியாசமான கெட்-அப்பில் பங்கேற்று அதிரடி சண்டைக்காட்சிகளில் நடித்தார்.

நேற்று மாலையில் படப்படிப்பு முடிந்ததும் நடிகர் ரஜினிகாந்த் திறந்த காரில் நின்றவாறு ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்து கும்பிட்டவாறு சென்றார். அவரது காரை பின்தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் சென்றனர்.

மேலும் செய்திகள்