< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நடிகர் பிரபு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி
|21 Feb 2023 11:59 PM IST
நடிகர் பிரபு உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை,
நடிகர் பிரபு உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு சிறுநீரகம் தொடர்பான பாதிப்பு இருந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு லேசர் அறுவைச்சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டது என்றும், அவர் பிரபு நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது.
மேலும், அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.