< Back
மாநில செய்திகள்
மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு சிலை வைத்த பாஜகவினர்...!
மாநில செய்திகள்

மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு சிலை வைத்த பாஜகவினர்...!

தினத்தந்தி
|
23 Oct 2023 8:51 PM IST

மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு பாஜகவினர் சிலை வைத்துள்ளனர்.

விழுப்புரம்,

திரைப்பட இயக்குனரும், ஜெயிலர், பரியேறும் பெருமாள் உள்பட பல படங்களில் நடித்த பிரபல நடிகருமானவர் மாரிமுத்து. இவர், சின்னத்திரை தொடரிலும் நடித்துள்ளார்.

இதனிடையே, நடிகர் மாரிமுத்து கடந்த மாதம் 8ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு திரை உலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உயிரிழந்த மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத்தேரில் கடந்த தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், விழுப்புரத்தில் நடிகர் மாரிமுத்துவுக்கு பாஜகவினர் சிலை வைத்துள்ளனர். மறைந்த நடிகர் மாரிமுத்து மற்றும் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு பாஜகவினர் சிலை அமைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்