< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நந்தம்பாக்கத்தில் வரும் 8, 9-ந்தேதிகளில் நடைபெறும் வேளாண் வர்த்தக திருவிழா - நடிகர் கார்த்தி அழைப்பு
|6 July 2023 5:28 PM IST
வேளாண் திருவிழாவிற்கு அனைவரும் குடும்பத்துடன் வருகை தர வேண்டும் என நடிகர் கார்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை,
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் வேளாண் வர்த்தக திருவிழாவிற்கு பொதுமக்கள் அனைவரும் வந்து ஆதரவு தர வேண்டும் என நடிகர் கார்த்தி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது;-
"வரும் ஜூலை 8, 9-ந்தேதிகளில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வேளாண் வர்த்தக திருவிழாவை நமது தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண் உற்பத்தி நிறுவனங்கள் அவர்களது பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய உள்ளனர். இந்த வேளாண் திருவிழாவிற்கு நாம் அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து வேளாண் மக்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.