< Back
மாநில செய்திகள்
Actor Jeeva was involved in a car accident
மாநில செய்திகள்

கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா

தினத்தந்தி
|
11 Sept 2024 3:33 PM IST

நடிகர் ஜீவா கார் விபத்தில் சிக்கினார்.

கள்ளக்குறிச்சி,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஜீவா கார் விபத்தில் சிக்கி இருக்கிறார். கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு குடும்பத்தினருடன் காரில் வந்து கொண்டிருந்திருக்கிறார் ஜீவா. அப்போது, கள்ளக்குறிச்சியின் சின்னசேலம் அருகே கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் ஒன்று காரின் குறுக்கே வந்துள்ளது.

இதனால், அதில் மோதாமல் இருக்க ஜீவா காரை திருப்ப சாலையோர தடுப்பு கட்டையில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது.

நடிகர் ஜீவா தற்போது 'மாநகரம், டாணாக்காரன்' போன்ற படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள புதிய படத்தில் நடித்துள்ளார். கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாகவும், நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு 'பிளாக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

மேலும் செய்திகள்