< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மனைவி ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி போலீசில் புகார்
|24 Sept 2024 8:10 PM IST
மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் ஜெயம் ரவி புகார் அளித்திருக்கிறார்.
சென்னை,
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து இருக்கிறார்.
அதனைத்தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு, தன்னை வீட்டை விட்டு ஆர்த்தி வெளியேற்றி விட்டதாக கூறி ஜெயம் ரவி போலீஸில் புகார் தெரிவித்ததாகவும் ஆனால் ஆர்த்தி அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.
சென்னை ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள ஆர்த்தி வீட்டில் இருந்து தனது உடைமைகளை மீட்டுத்தருமாறு ஜெயம் ரவி அந்த புகாரில் தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.