< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
அக்னி சட்டி ஏந்தி சமயபுரம் மாரியம்மனை வணங்கிய நடிகர் கஞ்சா கருப்பு
|8 April 2023 2:56 AM IST
அக்னி சட்டி ஏந்தி சமயபுரம் மாரியம்மனை நடிகர் கஞ்சா கருப்பு வணங்கினார்.
சமயபுரம்:
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். நினைத்தது நிறைவேற வேண்டும் என்று வேண்டி பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை திரைப்பட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு தனது குடும்பத்தினரோடு மஞ்சள் உடை அணிந்து, அக்னி சட்டி எடுத்து கோவிலை வலம் வந்து சமயபுரம் மாரியம்மனை வணங்கினார்.
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளரான நிலையில், மீண்டும் அவர் முதல்-அமைச்சராக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு சமயபுரம் மாரியம்மனுக்கு அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தியதாக கஞ்சா கருப்பு தெரிவித்தார்.