< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
செல்பி எடுக்க கேட்ட ரசிகையிடம் 'சாரி' சொன்ன நடிகர் அஜித்...!
|15 Jun 2022 8:50 PM IST
சென்னை விமான நிலையத்தில் செல்பி எடுக்க கேட்ட ரசிகையிடம் நடிகர் அஜித் மறுப்பு தெரிவித்து சாரி சொன்னார்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்ல நடிகர் அஜித் வந்திருந்தார். அப்போது அஜித்தை கண்ட பெண் ஒருவர் செல்பி எடுப்பதற்காக கேட்டுள்ளார்.
அதற்கு அஜித் மறுப்பு தெரிவித்து அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு விட்டு புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் அஜித்தை மத்திய தொழிற்படை போலீஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இந்த நிகழ்வினை செல்போனில் புகைப்படம் எடுத்த பயணிகள் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது.