< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தேர்தலுக்கு பின் கவர்னரின் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டப்படும்: அமைச்சர் ரகுபதி
|16 March 2024 11:11 AM IST
பொன்முடி அமைச்சராக பதவியேற்பதில் எந்த தடையும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை ஓட்டேரியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
"துணைவேந்தர்கள் பதவி கால விவகாரத்தில் கவர்னர் வரம்பு மீறி செயல்படுகிறார். கவர்னர் மாளிகையில் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார். தேர்தல் முடிவுக்கு பிறகு கவர்னரின் தனி ராஜ்ஜியத்திற்கு முடிவு கட்டப்படும்.
பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் எந்த தடையும் இல்லை. தேர்தல் தேதி அறிவித்தாலும் தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்து பதவி ஏற்பு விழா நடத்தப்படும்." இவ்வாறு அவர் பேசினார்.