< Back
மாநில செய்திகள்
பூஜைக்கு இடையூறு செய்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை
கடலூர்
மாநில செய்திகள்

பூஜைக்கு இடையூறு செய்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை

தினத்தந்தி
|
29 Jun 2023 12:39 AM IST

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பூஜைக்கு இடையூறு செய்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் தீட்சிதர் புகார் அளித்தார்.

சிதம்பரம்,

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் கற்பக கணேசன், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோருக்கு பதிவு தபாலில் புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 27-ந்தேதி நடராஜர் கோவிலில் பூஜைகாரராக தினபடி பூஜை செய்யும் பணியில் இருந்தபோது அறநிலையத்துறை அதிகாரிகள், பெண் காவல் துறையினர் திடீரென கனகசபைக்குள் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை தடுத்த போது, அவர்கள் பூஜைக்கு இடையூறு செய்து என்னை தாக்கினர்.

எனவே தன்னை தாக்கிய போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது உரிய வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்